February 23, 2025
தேசியம்
செய்திகள்

April மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் வரவு செலவு திட்டம்

2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு திட்டம் April மாதம் தாக்கல் செய்யப்படுகிறது.

April மாதம் 16ஆம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கட்கிழமை அறிவித்தார்.

2024 மத்திய அரசின் வரவு செலவு திட்டம் கனடியர்களுக்கு நாட்டின் நிதி நிலை, ஒட்டுமொத்த பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த நிலையை வழங்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

அதேவேளை Liberal அரசாங்கத்தின் செலவின திட்டங்கள் குறித்து இந்த வரவு செலவு திட்டத்தில் விபரங்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலையுதிர் கால பொருளாதார புதுப்பித்தலின்படி, 2023-24ல் மத்திய அரசின் பற்றாக்குறை $40 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2024-25ல் பற்றாக்குறை $38.4 பில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ontarioவில் மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் தொற்றுகள் வரை பதிவாகலாம்

Lankathas Pathmanathan

Canadian Open பட்டத்தை கனடியர் வெற்றி

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment