December 12, 2024
தேசியம்
செய்திகள்

மறைந்த கனடிய பிரதமருக்கு தமிழ் கனடியர்களின் இரங்கல்கள்

கனடிய பிரதமர் Brian Mulroneyயின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney தனது 84 வயதில் கடந்த வாரம் காலமானார்.
அவரது மறைவுக்கு கனடிய தமிழர்  சமூகம் தனது இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

9 ஆம் ஆண்டு மாணவனாக Brian Mulroneyயுடன் தனது முதல் சந்திப்பை மறக்க முடியாது என தனது இரங்கல் செய்தியில் அமைச்சர் கரி ஆனந்தசங்கரி நினைவு கூர்ந்தார்.

1987ஆம் ஆண்டு நிகழ்ந்த அந்த சந்திப்பு தன்னில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது என அவர் குறிப்பிட்டார்.

Brian Mulroney மரியாதைக்குரிய ஒரு தலைவர் என Ontario மாகாண இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

1986 இல் கனடாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களை அவர் வரவேற்ற முறையை தமிழ் சமூகம் மறக்காது என அவர்  கூறினார்.

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Brian Mulroneyயின் வாழ்வு கனடிய தேசிய நலன், உலகளாவிய மனிதாபிமான பிரச்சினைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நிறைந்தது என Ontario மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்தார்.

கனடிய வரலாற்றின் தலை சிறந்த அரச தலைவர்களில் ஒருவரிடமிருந்து பிரியாவிடை பெறுகிறோம் என கனடியத் தமிழர் பேரவை – CTC – தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது.

Newfoundland மாகாணத்தின் கடற்கரையில் தரையிறங்கிய தமிழ் அகதிகளை வரவேற்பதற்கு தனது நேர்மையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியவர் Brian Mulroney என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கனடாவின் பிரதமராக இருந்தபோது Brian Mulroney அறிமுகப்படுத்திய பல சீர்திருத்தங்கள் வளமான நாட்டை கட்டியெழுப்புவதில் பங்கு வகித்தன என கனடியத் தமிழர் தேசிய அவை – NCCT – தனது இரங்கல் செய்தியில் தெரிவிக்கின்றது.

கனடாவில் உள்ள தமிழர்களின் வரலாற்றில் அவர் ஒரு முக்கிய பங்கை ஆற்றினார் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தமிழ் மக்களுக்கு ஆற்றிய அனைத்து பணிகளையும் கௌரவிக்கும் வகையில் கனடியத் தமிழ் மரபு விருதுடன் – Canadian Tamil Legacy Award – அவர் 2020 ஆம் ஆண்டில், NCCT ஆல் அங்கீகரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய சபாநாயகரை தெரிவு செய்யவுள்ள நாடாளுமன்றம்

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் நீதன் சான்

Lankathas Pathmanathan

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment