முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்.
தனது 84 வயதில் Brian Mulroney காலமானார்.
அவர் கனடாவின் 18ஆவது பிரதமராவார்.
குடும்பத்தினர் சூழ அவர் காலமானதாக அவரது புதல்வி Caroline Mulroney தெரிவித்தார்.
Brian Mulroney, Quebec மாகாணத்தின் Baie-Comeau நகரில் பிறந்தவர்..
1983ஆம் ஆண்டு Progressive Conservative கட்சியின் தலைமை பதவியை அவர் வெற்றி பெற்றார்.
1984ஆம் ஆண்டு அவர் கனடிய வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை வெற்றி பெற்று
பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக பதவி ஏற்றார்.