December 12, 2024
தேசியம்
செய்திகள்

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Ontario பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை கட்டுப்படுத்தும் சட்டமூலம் இரத்து செய்யப்படுகிறது.

நீதிமன்ற மேன்முறையீட்டில் தோல்வியடைந்த பின்னர் Bill 124 சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான ஒரு அறிக்கையில் இந்த சட்டமூலம் இரத்து செய்யப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

இந்த சட்டமூலத்தை இரத்து செய்வது, அண்மைய நீதிமன்ற தீர்ப்பால் உருவாக்கப்பட்ட தொழிலாளர்களின் சமத்துவமின்மைக்கு தீர்வாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வை மூன்றாண்டு காலத்திற்கு கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் அமைந்தது.

Related posts

கடத்தப்பட்ட குழந்தைகளுக்கு Amber எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Conservative புதிய தலைவர் திட்டமிட்டபடி அறிவிக்கப்படுவார்

Lankathas Pathmanathan

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment