தேசியம்
செய்திகள்

இமாலைய பிரகடனத்தை கனடிய அரசாங்கம் ஆதரிக்கவில்லை!

இமாலைய பிரகடனத்திற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை தெரிவிக்கவில்லை என இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகர் Eric Walsh இமயமலைப் பிரகடனத்தை அங்கீகரிக்கவில்லை எனவும் அதற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவையும் அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இமாலைய பிரகடனத்தின் நகல் ஒன்று கனடிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ராஜ் தவரட்ணசிங்கத்தினால் இலங்கைக்கான  கனடிய  உயர் ஸ்தானிகருக்கு வழங்கப்பட்டது.

கடந்த December மாதம் 15ஆம் திகதி கொழும்பில் இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகர் Eric Walsh இமயமலைப் பிரகடனத்தின் நகலை பெற்றுக் கொண்டார்.

ஆனாலும் இமயமலைப் பிரகடனத்திற்கு கனடிய அரசாங்கத்தின் ஆதரவை அறிவிக்கும் ஒரு நகர்வு இது அல்ல என இலங்கைக்கான  கனடிய  உயர் ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இமயமலைப் பிரகடனத்தின் நகலை பெற்றுக் கொண்டதன் மூலம் கனடிய அரசாங்கம் இமாலைய பிரகடனத்தை ஆதரிப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கைக்கான  கனடிய  உயர்ஸ்தானிகரின் இந்த தெளிவு படுத்தல் வெளியாகியுள்ளது.

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி காரணமாக கனடிய தமிழர் பேரவை பெரும் எதிர்பை எதிர்கொண்டு வருகின்றது.

இதன் எதிரொலியாக  கனடிய தமிழர் பேரவையின் இயக்குனர்கள் குழு உறுப்பினர் துஷி ஜெயராஜ் தனது பதவியில் இருந்து விலகினார்.

கனடிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்ததற்கு பொறுப்பேற்று கனடிய தமிழர் பேரவையின் ஆலோசனை சபை உறுப்பினர் ராஜ் தவரட்ணசிங்கம் பதவி விலகியிருந்தார்.

Related posts

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan

Leave a Comment