கனடிய தபால் திணைக்களம் – Canada Post – முத்திரையின் விலையை ஏழு சதத்தால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் சிறு புத்தகங்கள் – booklet – அல்லது சுருள்களில் – coil or pane – விற்பனையாகும் முத்திரையின் விலை 99 சதத்திற்கு அதிகரிக்கிறது.
தனித்தனியாக விற்பனையாகும் முத்திரைகளின் விலை உள்நாட்டு கடிதத்திற்கு $1.07ல் இருந்து $1.15 ஆக அதிகரிக்கிறது.
அமெரிக்க, சர்வதேச கடித அஞ்சல், உள்நாட்டு பதிவு அஞ்சல் ஆகியவற்றிலும் கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு பொதுமக்கள் கருத்துக்காக வெள்ளிக்கிழமை (09) அறிவிக்கப்பட்டது.
ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு பின்னர் இந்த விலை உயர்வு May 6 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
கடந்த தசாப்தத்தில் உள்நாட்டு கடித அஞ்சல் கட்டணங்கள் இரண்டு முறை அதிகரித்துள்ளதாக கனடிய தபால் திணைக்களம் கூறுகிறது:
2019 இல் ஐந்து சதத்தால், 2020 இல் இரண்டு சதத்தால் முத்திரைகளின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.