தேசியம்
செய்திகள்

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Oakville பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்த பெண் தமிழர் என தெரியவருகிறது.

January மாதம் 20ஆம் திகதி 20 வயதான பெண் Oakville நகரில் Sunningdale பாடசாலைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவசர உதவி கோரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவர் 20 வயதான சுஜனி தவனேசன் என குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.

இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படாது என Halton பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்

இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்தாலும், புலனாய்வாளர்கள் எந்த சந்தேக நபர்களையும் தேடவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த மரணத்துடன் தொடர்புடைய எந்த குற்றச்சாட்டுகளும் எவர் மீதும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரது மரணத்திற்கான காரணம் குறித்த விபரங்களை வெளியிட காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

சுஜனி தவனேசனின் இறுதி கிரியைகள் புதன்கிழமை (31) நடைபெற்றன.

Related posts

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

Leave a Comment