கனடிய பொருளாதாரம் முக்கிய தொழில்களில் வளர்ச்சி காண்கிறது.
November மாதத்தில் கனடிய பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.
இது ஆறு மாதங்களில் பொருளாதார வளர்ச்சியின் முதல் மாதத்தைக் குறிக்கிறது.
நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆரம்ப மதிப்பீடு தெரிவிக்கிறது.
இதன் மூலம் 2023ல் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதமாக உள்ளது.
உற்பத்தி, மொத்த வர்த்தகம் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களின் இலாபத்தால் November மாதத்தில் வளர்ச்சி உந்தப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.