அடுத்த பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக பிரதமர் Justin Trudeau இருப்பார் என முன்னாள் கனடிய மத்திய வங்கி ஆளுநர் Mark Carney வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் கட்சியின் தலைமைப் பதவிக்கு Mark Carney போட்டியிட விரும்புகின்றார் என பல ஆண்டுகளாக நிலவி வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
கனடா குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் Mark Carney குறிப்பிட்டார்.
அவர் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவில்லை.
Liberal கட்சித் தலைமைப் பதவிக்கான போட்டியை அவர் நிராகரிக்கிறாரா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவில்லை.
இதனை ஒரு அனுமானத்தின் அனுமானம் என கூறிய Mark Carney “இல்லாத ஒன்றை நிராகரிக்காமல் இருப்பது எளிது” என குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் Liberal கட்சியின் தலைவராக பிரதமர் Justin Trudeau இருப்பார் என கூறிய Mark Carney “நான் அவரை ஆதரிக்கிறேன்” எனவும் வலியுறுத்தினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை தலைமை பதவியில் இருந்து வழிநடத்தத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.
அடுத்த பொதுத் தேர்தலில் October 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்னதாக அவர் பதவி விலகுவாரா என்ற ஊகங்கள் நீடித்து வருகிறது.
தலைமை மதிப்பாய்வுக்கான நேரமா இது என்பது குறித்த கேள்வியை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Ken McDonald கடந்த வாரம் எழுப்பி இருந்தார்.