December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

கனடிய அரசாங்கத்துடன் வர்த்தக பேச்சுவார்த்தையை இடைநிறுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் தகுந்த முன்னேற்றம் ஏற்படவில்லை என இங்கிலாந்து அரசாங்கம் கூறுகிறது.

கனடாவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Susannah Goshko வியாழக்கிழமை (25) இந்த தகவலை வெளியிட்டார்.

எதிர்காலத்தில் கனடாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

வர்த்தக பேச்சுகளில் உடன்பாட்டை எட்ட விரும்பாத இங்கிலாந்தின் நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளது என கனடிய வர்த்தக அமைச்சர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

பேச்சுவார்த்தைகளில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாதது குறித்து இங்கிலாந்து வர்த்தக அமைச்சரின் அலுவலகத்துடன் கனடா தனது “ஏமாற்றத்தை” வெளிப்படுத்தியுள்ளது.

கனடாவும் இங்கிலாந்தும் 2022 இல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

Related posts

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

Lankathas Pathmanathan

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும்

Lankathas Pathmanathan

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment