தேசியம்
செய்திகள்

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

முதல்வர் Doug Ford அமைச்சரவையில் இருந்து Ontario மாகாண சபை உறுப்பினர் Parm Gill விலகுகிறார்.

Milton மாகாண சபை உறுப்பினர் Parm Gill தனது மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலக வியாழக்கிழமை (25) முடிவு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Pierre Poilievre தலைமையில் Conservative கட்சியின் சார்பில் மத்திய அளவில்  Milton தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புவதாக Parm Gill தெரிவித்தார்.

அவர் 2018ஆம் ஆண்டில் முதன்முதலில் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலில் குடியுரிமை, பன்முக கலாச்சாரத்தின் அமைச்சராக (Minister of Citizenship and Multiculturalism) பணியாற்றினார்.

Parm Gill  மாகாண சபைக்கு தெரிவாக முன்னர், Brampton-Springdale தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

அவர் நாடாளுமன்ற செயலாளராக இருந்தார்.

Related posts

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

Lankathas Pathmanathan

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment