தேசியம்
செய்திகள்

Newfoundland and Labrador அமைச்சர் மரணம்

Newfoundland and Labrador அமைச்சர் Derrick Bragg காலமானார்.

59 வயதான Derrick Bragg கடந்த ஆண்டு மீன்வளத்துறை அமைச்சராக தனது நியமனத்தில் இருந்து விலகினார்.

நாக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

Newfoundland and Labrador மாகாண முதல்வர் Andrew Furey இவரது மரணத்தை அறிவித்தார்.

Derrick Bragg முதல் தடவையாக 2015ஆம் ஆண்டு Fogo Island – Cape Freels தொகுதியின் மாகாண சபை உறுப்பினராக தெரிவானார்.

அதன் பின்னர் அவர் இரண்டு முறை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இறுதியாக February 13, 2021இல் தெரிவானார்.

Related posts

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

இருவரின் உடல்கள் N.S. கரையோரம் மீட்பு

Lankathas Pathmanathan

எட்டப்பட்டது ஒப்பந்தம் – தவிர்க்கப்பட்டது CUPE வேலை நிறுத்தம்!

Lankathas Pathmanathan

Leave a Comment