சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகளின் எண்ணிக்கையை 35 சதவீதம் குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகளின் எண்ணிக்கையை சுமார் 360,000க்கு குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குடிவரவு அமைச்சர் Marc Miller திங்கள்கிழமை காலை இந்த முடிவை அறிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கும் கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையாக இது அமைகிறது
2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதியில் மறுமதிப்பீடு செய்யப்படும்.
சர்வதேச மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அதிகமாக வசூலிக்கும் நிறுவனங்களை அடையாளம் காண இந்த நகர்வு உதவும் என அமைச்சர் தெரிவித்தார்.
கனடாவிற்குள் நுழையும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக மாகாணங்களில் இருந்து மத்திய அரசாங்கம் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.
2022 இல் 800,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கு தற்காலிக கல்வி அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.