இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பான ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவதானித்து வருவதாக கனடிய பிரதமர் தெரிவித்தார்.
கனடா சர்வதேச நீதிமன்றத்தை ஆதரிப்பதாக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (17) கூறினார்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டை கனடா அவதானமாக கவனித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டை கனடா ஏற்கிறதா என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் கருதினால் அந்த தீர்ப்பை கனடா அங்கீகரிக்குமா என்பதையும் Justin Trudeau குறிப்பிடவில்லை.
நாங்கள் ஆதரிக்கும் ஒரு செயல்முறையின் இறுதி முடிவு என்ன என்பது குறித்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை எனவும் பிரதமர் கூறினார்.
காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் இரண்டு நாட்கள் இது குறித்த பொது விசாரணைகளை நடத்தியது.