சிறிய ரக விமானம் ஒன்று Ajax நகர வீதியில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் திங்கட்கிழமை (15) நிகழ்ந்தது.
ஒரு சிறிய விமானம் அதன் இயந்திரம் செயலிழந்ததையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்தது என Durham பிராந்திய காவல்துறை (Durham Regional Police – DRPS) உறுதிப்படுத்தியது.
இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து விமானி விமானத்தை சாலையில் தரையிறக்க முடிவு செய்தார்.
இதனால் ஒரு சில கம்பங்களும் விமானமும் சேதமடைந்துள்ளன காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.