December 12, 2024
தேசியம்
செய்திகள்

Calgary சீக்கியர் கோவில் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் காயம்

Calgary நகர சீக்கியர் கோவிலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றில் பலர் காயமடைந்தனர்

ஞாயிற்றுக்கிழமை இரவு Dashmesh கலாச்சார மையத்தில் நிகழ்ந்த குழப்பம் ஒன்றில் பலர் காயமடைந்ததாக Calgary காவல்துறையினர் தெரிவித்தனர்

இரவு 9 மணியளவில், வடகிழக்கு Calgary நகரில் உள்ள சீக்கியர் கோவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிகழ்ந்த தாக்குதலின் போது நான்கு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

சீக்கியர் கோவிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்ததாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் ஒருவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குழு அவர்களின் நம்பிக்கையின் விதிகளைப் பின்பற்ற வில்லை எனவும் சீக்கியர் மதத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்

December 24ஆம் திகதி ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம்  15 தினங்கள் இரவும் பகலும் தொடர்ந்தது.

Related posts

ரஷ்ய அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

Lankathas Pathmanathan

Muskokaவில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment