February 23, 2025
தேசியம்
செய்திகள்

B.C உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலி

British Colombia மாகாண Glacier தேசிய பூங்கா பூங்காவில் நிகழ்ந்த உலங்கு வானூர்தி விபத்தில் விமானி பலியானார்.

வெள்ளிக்கிழமை காணாமல் போனதாக முறையிடப்பட்ட உலங்குவானூர்தி கண்டுபிடிக்கப்பட்டதை RCMP ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

இந்த உலங்குவானூர்தியில் பயணித்த தனி நபரான விமானி  உயிர் பிழைக்கவில்லை என RCMP கூறியது.

பலியான விமானி யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், BC மரண விசாரணை பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து RCMP செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உலங்குவானூர்தி Calgary நகரில் இருந்து Sicamous நகராட்சி நோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 16 – திங்கள்)

Gaya Raja

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Liberal அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறலாம்: NDP எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment