December 12, 2024
தேசியம்
செய்திகள்

இந்த வாரம் கனடாவில்: -50 C வரை வீழ்ச்சி அடையும் குளிர்நிலை – 40 centimeter பனி

Ontario, Quebec மாகாணங்களில் சில பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது.

செவ்வாய்கிழமை முதல் இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனி எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் இரவு எதிர்பார்க்கப்படும் மோசமான பனிப்பொழிவு புதன்கிழமை காலை வரை தொடரும் என அந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

அதேவேளை சுற்றுச்சூழல் கனடா Yukon, Northwest Territories, Saskatchewan ஆகிய பகுதிகளில் கடுமையான குளிர் எச்சரிக்கைகளை வெளியிட்டது.

சில இடங்களில் குளிர்நிலை காற்றின் குளிர்ச்சியுடன் -50 C வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

British Colombia மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் மாலை முதல் புதன்கிழமை காலை வரை 10 முதல் 20 centimeter பனி எதிர்வு கூறப்படுகிறது.

Newfoundland and Labrador மாகாணத்தின் சில பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

British Colombia மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு கட்டணத்தில் பெரும் சேமிப்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja

Leave a Comment