JN.1 என அழைக்கப்படும் ஒரு புதிய COVID துணை மாறுபாடு உருவாகியுள்ளது.
இது தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் பொது சுகாதார முகமையகம் இது குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது
இதன் தொற்றின் வேகம் குறித்தும் கூடுதல் அறிகுறிகள் குறித்தும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
தற்போது, அனைத்து COVID வகைகளிலும் இந்த துணை மாறுபாடு அதிக விகிதத்தை உருவாக்குகிறது.
கனடாவில் பதிவாகும் அனைத்து நோய்த் தொற்றுகளிலும் பாதிக்கும் மேற்பட்டவை (51. 9 சதவீதம்) இந்த JN.1 துணை மாறுபாடு என கூறப்படுகிறது.
JN.1 துணை மாறுபாடு October 9 கனடாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் இதன் வேகமாக அதிகரித்துள்ளது.