911 அவசர அழைப்புக்கு காவல்துறையினர் உரிய நேரத்தில் பதிலளிக்காத நிலையில் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் Thunder Bay நகரில் நிகழ்ந்தது.
Thunder Bay நகர இல்லமொன்றில் 21 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
December 30 திகதி Thunder Bay காவல்துறையினருக்கு அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டது.
ஆனாலும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் செல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.