February 22, 2025
தேசியம்
செய்திகள்

Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!

Mississauga நகரில் பொது பேருந்து வாகனம் மீது மோதியதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.

பேருந்து நடத்துனர் வாகனம் மீது மோதியதில், பேருந்து  பள்ளத்தில் விழுந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) காலை நிகழ்ந்தது.

செவ்வாய் காலை 11 மணியளவில் நெடுஞ்சாலை 27 (Highway 27 and Dixon Road) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

Toronto Pearson சர்வதேச விமான நிலையம் நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்கு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் MiWay பொது பேருந்தின் ஓட்டுநர் கடும் காயம் அடைந்தார்.

அவர் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பேருந்து மோதிய வாகனத்தின் சாரதியும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக முதலில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் 13 பயணிகள் பேருந்தில் பயணித்ததை உறுதிப்படுத்திய காவல்துறையினர், அவர்களில் 10 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெளிவுபடுத்தினார்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

Related posts

உரிமை கோரப்படாத $70 M அதிஸ்டலாப சீட்டு விரைவில் காலாவதி !

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment