தலைநகர் Ottawa Rideau ஆற்றில் பனியில் விழுந்த பதின்ம வயதினர் ஒருவர் இறந்தார் – மற்றும் ஒருவர் காணாமல் போனார்.
காணாமல் போனவரை தேடும் பணி தொடர்வதாக Ottawa காவல்துறை கூறுகிறது.
நான்கு இளைஞர்கள் பனியில் விழுந்த சம்பவம் குறித்து புதன்கிழமை (27) அவசர அழைப்பு குழுவினருக்கு அழைப்பு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்களில் இரண்டு இளைஞர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு 15 வயது சிறுமியும் 17 வயது சிறுவனும் சிகிச்சை பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் இரண்டு இளைஞர்கள் – 16 வயது, 17 வயது ஆண்கள் – ஆகியோரை காணவில்லை காவல்துறையினர் வியாழக்கிழமை காலை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.