February 22, 2025
தேசியம்
செய்திகள்

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் இல்லை

Maritimes மாகாணங்களில் 100,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை தோன்றியுள்ளது

பலமான காற்றின் தாக்கம் Maritimes மாகாணம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (19) உணரப்படுகிறது.

இதன் காரணமாக Nova Scotia, New Brunswick, Prince Edward Island ஆகிய மாகாணங்களில் 100,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

சுற்றுச்சூழல் கனடாவின் மழை எச்சரிக்கை Nova Scotia மாகாணத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு நடைமுறையில் உள்ளது.

New Brunswick மாகாணத்தில் பலமான காற்றின் தாக்கம் காரணமாக மின்சார இழப்புகள் எதிர் கொள்ளப்படுகின்றன.

செவ்வாய் காலை 11 மணி நிலவரப்படி 1,128 மின்தடை காரணமாக 99,450 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

Nova Scotiaவில் 988 செயலிழப்புகள் காரணமாக 42,944 வாடிக்கையாளர்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

Prince Edward Islandடில் 1,146 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியாவிலிருந்து கனடா வரும் விமானங்களுக்கான தடை அடுத்த வாரம் நீக்கப்படும் !

Gaya Raja

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை முதல் ஆரம்பமான கனடாவின் புதிய எல்லை விதிகள்!

Gaya Raja

Leave a Comment