February 23, 2025
தேசியம்
செய்திகள்

Quebec பனிப்பொழிவு காரணமாக மின்சாரத்தை இழந்த 106,000 வீடுகள்!

Quebec மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பெரும் எண்ணிக்கையானவர்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.

Quebec மாகாணம் முழுவதும் 106,000க்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.

மாகாண ரீதியில் 25 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக பாடசாலைகள் பல மூடப்பட்டன.

பனிப்பொழிவின் அடிப்படையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக Montreal நகரம் அமைந்துள்ளது.

அங்கு மேலும் சில சென்டி மீட்டர்கள் பனிப்பொழிவு இன்னும் வீழ்ச்சி அடையக் கூடும் என வானிலை நிறுவனம் கணித்துள்ளது.

சுற்றுச்சூழல் கனடாவின் கடுமையான வானிலை எச்சரிக்கையின்படி, மொத்த அளவு 20 முதல் 30  சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

வேகமான பனிப்பொழிவு வாகன பயணத்தை கடினமாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (04) இறுதிக்குள் பனிப்பொழிவு நின்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

குறைவடையும் வீட்டின் விலை?

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan

கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்கள் நியாயமானது ;பிரதமர்

Gaya Raja

Leave a Comment