கனடிய பொருளாதாரம் வருடாந்த அடிப்படையில் மூன்றாம் காலாண்டில் 1.1 சதவீதம் சுருங்கியது.
கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.
சர்வதேச ஏற்றுமதியில் குறைவு, வணிகங்களின் மெதுவான சரக்கு குவிப்பு ஆகியவை அரசாங்க செலவினங்கள், வீட்டு முதலீட்டு அதிகரிப்பால் ஓரளவு ஈடுசெய்யப்பட்டதாக புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.
இந்த அறிக்கை நுகர்வோர் செலவினம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் தொடர்ந்து சீராக இருப்பதைக் காட்டுகிறது.
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வுகள் நுகர்வோர், வணிகச் செலவுகள் மீது கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.