தேசியம்
செய்திகள்

போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் பாவனையில்?

Ontario, Quebec ஆகிய மாகாணங்களில் புதிய போலி இரண்டு டொலர் நாணயம் (Toonie) வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் Quebec மாகாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Quebec மாகாணத்தில் 26 ஆயிரம் போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சீனாவில் நாணயம் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி இரண்டு டொலர் நாணயங்களை இறக்குமதி செய்ய முயன்றதாக ஒருவர் Quebec மாகாணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கனடா எல்லை சேவைகள் முகமையகத்தின் (Canada Border Services Agency – CBSA) சுங்க அதிகாரி ஒருவர் கடந்த January மாதம் Montreal-Mirabel சர்வதேச விமான நிலையத்தில் 12 ஆயிரம் போலி இரண்டு டொலர் நாணயங்களை கைப்பற்றினார்.

CBSA புலனாய்வாளர்கள் இந்த வழக்கில் சந்தேக நபரின் வீட்டில் சோதனை செய்தபோது மேலும் 14 ஆயிரம் போலி இரண்டு டொலர் நாணயங்களை கண்டுபிடித்தனர்.

இதில் Quebec மாகாணத்தின் Sorel நகரை சேர்ந்த Jean-Francois Généreux என்பவர் குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சில மாதங்களுக்குப் பின்னர் வடக்கு Ontario நகரமொன்றில் மேலதிகமாக போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கைப்பற்றப்பட்டது.

இதில் ஒருவரை கைது செய்ததை Ontario மாகாண Sault Ste. Marie காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

கடந்த March மாதம் கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 15 போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கைப்பற்றப்பட்டது.

இது ஒரு புதிய போலியான இரண்டு டொலர் நாணயங்கள் கனடா முழுவதும் புழக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்துவதாக நிபுணர்கள்  கூறுகின்றனர்.

Related posts

கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை மறுத்த Ontario முதல்வர்

Lankathas Pathmanathan

ரஸ்யாவுக்கு எதிரான போராட செல்லும் எவரையும் கண்காணிக்கவில்லை: கனடிய வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment