தேசியம்
செய்திகள்

நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

நாடு முழுவதும் நடைபெற்ற நினைவு தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சனிக்கிழமையன்று நாடு முழுவதும் நடந்த நினைவு தின நிகழ்வுகளில் கனடியர்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர்.

உக்ரைன், காசா பகுதியில் போர் குறித்த அச்சம் தொடரும் நிலையில் இம்முறை நினைவு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

ஊர்வலங்கள் உட்பட்ட நிகழ்வுகளுடன் நினைவு தின நிகழ்வுகள் Atlantic கனடாவில் நடைபெற்றன.

தலைநகர் Ottawaவில், நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நினைவு தின அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆளுநர் நாயகம் Mary Simon உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பிரதமர் Justin Trudeau, படைவீரர் விவகார அமைச்சர் Ginette Petitpas Taylor, கனடிய பாதுகாப்பு தலைவர் ஆகியோர் Ottawa நினைவு தின அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Torontoவில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதில் Toronto நகர முதல்வர் Olivia Chow உரையாற்றினார்.

முதல்வர் Francois Legault, Montreal நகர முதல்வர் Valerie Plante, மத்திய குடிவரவு அமைச்சர் Marc Miller உள்ளிட்டோர் Quebec மாகாணத்தின் நினைவு தின நிகழ்வில் பங்கேற்றனர்.

Related posts

Mississauga நகர முதல்வரானார் Carolyn Parrish

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முன்கூட்டிய தேர்தல்: Doug Ford உறுதி செய்தார்

Lankathas Pathmanathan

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment