Edmonton வணிக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 41 வயது ஆணும் அவரது 11 வயது மகனும் கொல்லப்பட்டனர்.
இது ஒரு “இலக்கு வைக்கப்பட்ட சம்பவம்” என காவல்துறையினர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (09) மதியம் Petro-Canada எரிவாயு நிலையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததாக Edmonton காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.