கனடாவில் தொடரும் வெறுப்புணர்வின் வெளிப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் கனடாவில் அதிகரிக்கும் வெறுப்புணர்வின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறினார்.
கனடாவில் அதிகரிக்கும் யூத விரோத தன்மையை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க அனுமதிக்கும் வகையில் நீண்ட யுத்த நிறுத்தம் குறித்து புதன்கிழமை (08) Justin Trudeau கருத்து தெரிவித்தார்.