February 21, 2025
தேசியம்
செய்திகள்

Greenbelt ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: Ontario முதல்வர்

Greenbelt ஊழலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

இந்த விடயத்தில் RCMP தன்னை தொடர்பு கொள்ளவில்லை என அவர் கூறினார்.

Greenbelt வீட்டு மேம்பாட்டுத் திட்டம் குறித்து RCMP தற்போது விசாரணை ஒன்றை முன்னெடுக்கிறது.

இந்த நிலையில் Greenbelt திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிம் கூறினார்.

கணக்காய்வுத் தலைமை அலுவலர் (auditor general), நேர்மை ஆணையர் (integrity commissioner) ஆகியோர் இந்த விடயத்தில் தன்னையும் தனது அலுவலகத்தையும் குற்றமற்றவர்கள் என அறிவித்ததை Doug Ford சுட்டிக் காட்டினார்.

Greenbelt ஊழல் தொடர்பாக RCMP October மாதம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணையை RCMPயிடன் Ontario மாகாண காவல்துறையினர் கடந்த August மாதம் பரிந்துரைத்தனர்.

Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த தனது அரசாங்கத்தின் முடிவை “ஒரு தவறு” என Ontario முதல்வர் Doug Ford September மாதம் ஏற்றுக் கொண்டார்.

புதிய வீடுகளின் கட்டுமானத்திற்கு Greenbeltடைத் திறப்பதற்கான தனது அரசாங்கத்தின் முடிவை மாற்றியமைப்பதாக முதல்வர் கூறினார்.

Greenbelt குறித்த சர்ச்சையை அடுத்து இரண்டு அமைச்சர்கள் Doug Ford அமைச்சரவையிலிருந்து பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா: தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியது!

Gaya Raja

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Gaya Raja

Luka Magnotta சிறை மாற்றம் குறித்து எழும் கேள்விகள்

Lankathas Pathmanathan

Leave a Comment