மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை மத்திய நிதியமைச்சர் Chrystia Freeland இந்த வார இறுதியில் சந்திக்கவுள்ளார்.
கனடா ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து (Canada Pension Plan – CPP) Alberta மாகாணம் விலகுவதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிக்க இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) இந்த மெய்நிகர் சந்திப்பு நடைபெறும் என தெரியவருகிறது
CPP திட்டத்தில் இருந்து வெளியேறினால் Alberta மாகாணம் 334 பில்லியன் டொலர்களுக்கு தகுதியுடையது என Alberta முதல்வர் Danielle Smith கடந்த வாரம் கூறினார்
கடந்த திங்கட்கிழமை Danielle Smith அரசாங்கத்தின் சிம்மாசன உரையில் CPP திட்டத்தில் இருந்து வெளியேறுவது குறித்து குறிப்பிடப்படவில்லை