February 21, 2025
தேசியம்
செய்திகள்

Sault Ste. Marie நகரில் மூன்று குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக் கொலை!

Ontario மாகாணத்தின் Sault Ste. Marie நகரில்  3 குழந்தைகள் உட்பட ஐவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர்களில் மூன்று சிறுவர்களும், துப்பாக்கி தாரியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப வன்முறை இரண்டு வீடுகளில் துப்பாக்கிச் சூடு நிகழ வழிவகுத்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திங்கட்கிழமை (23) இரவு 10:20 மணி அளவில் ஒரு இல்லத்தில் 41 வயதான ஒருவரின் சடலத்தை காவல்துறையினர். கண்டுபிடித்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்னர் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் மற்றொரு இல்லத்திற்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர் அங்கு 45 வயதான ஒருவரை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்டனர் .

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த இல்லத்தில் மூன்று சிறுவர்களின் சடலங்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

6, 7, 12 வயது சிறுவர்கள் சடலங்களுடன் 44 வயதான ஒருவரின் சடலமும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சூட்டு மரணமடைந்தார் என கூறும் காவல்துறையினர் அவரை இந்த சம்பவங்களின் துப்பாக்கிதாரி என அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை என கூறும் காவல்துறையினர் குடும்ப வன்முறை இதற்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

இதனால் குற்றம் சாட்டப்பட்டவர், பலியானவர்கள், காயமடைந்தவர் ஆகியோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

இவை தற்செயலான வன்முறைச் செயல்கள் அல்ல என கூறும் காவல்துறையினர் , பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

Related posts

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan

36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம்

Lankathas Pathmanathan

உக்ரைன் – கனடிய பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment