கனடா தனது உள்ளக விவகாரங்களில் தொடர்ச்சியாக தலையீடு செய்து வருவதாக இந்தியா கூறுகிறது.
கனடாவுடனான தனது உறவு கடினமான கட்டத்தை கடந்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை (22) இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனேடிய சீக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இந்தியா, இதில் கனடாவின் நிலைபாடு குறித்து கோபமடைந்துள்ளது.
இந்தியாவில் இருந்து 41 தூதர்கள், அவர்களின் 42 குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் வியாழக்கிழமை (19) அறிவித்தது குறிப்பிடத்தக்கது.