தேசியம்
செய்திகள்

சர்வதேச சட்டத்திற்கு மாறாக செயல்படும் இந்தியா? – கனடா கண்டனம்!

இந்தியாவில் இருந்து 41 தூதர்கள் அவர்களின் குடும்பத்தினரை கனடிய அரசாங்கம் வெளியேற்றுகிறது.

இந்தியாவில் இருந்து 41 தூதர்கள், அவர்களின் 42 குடும்ப உறுப்பினர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கனடிய அரசாங்கம் வியாழக்கிழமை (19) அறிவித்தது.

41 கனடிய தூதர்களின் இராஜதந்திர தரத்தை இந்தியா விலக்கிய நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்

“வெள்ளிக்கிழமைக்குள் (21) இந்தியாவில் உள்ள உள்ள 21 கனேடிய தூதர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களை தவிர ஏனைய அனைவருக்கும் தூதரக விலக்குகளை ஒருதலைப்பட்சமாக நீக்கும் திட்டத்தை இந்தியா முறையாகத் அறிவித்து விட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்” என அமைச்சர் Melanie Joly கூறினார்.

இராஜதந்திர சமத்துவத்திற்கான அவர்களின் “நியாயமற்ற” கோரிக்கையில், இந்தியா 21 தூதர்கள், அவர்களது குடும்பத்தினர் மாத்திரம் தங்கள் இராஜதந்திர தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் என Melanie Joly கூறினார்.

இதன் மூலம் ஏனையவர்களின் பாதுகாப்பை தன்னிச்சையாக அகற்றி, அவர்களைப் பழி வாங்குதல் அல்லது கைது செய்வதற்கான ஆபத்தில் இந்திய அரசாங்கம் ஆழ்த்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கனேடியர்கள், எங்கள் இராஜதந்திரிகளின் பாதுகாப்பு எப்போதும் எனது முக்கிய கவலையாக உள்ளது என கூறிய அமைச்சர், எமது தூதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டனர் என உறுதிப்படுத்தினார்.

நமது இராஜதந்திரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

Gaya Raja

Ontario: சூரிய கிரகணத்திற்கு பின்னர் 115க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பாதிப்பு?

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment