தேசியம்
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடா முழுவதும் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இலையுதிர்கால நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த தகவல் வெளியானது.

கனடாவில் October 1 முதல் 7 வரை மொத்தம் 10,218 புதிய COVID தொற்றுகள் பதிவாகியுள்ளன.

October 10 வரை, 3,797 பேர் COVID தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த குளிர் காலத்தின் பின்னர் இந்த எண்ணிக்கை மிக அதிகமானதாகும்.

இந்த அதிகரிப்பு குறித்து அச்சமடையத் தேவையில்லை என தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

புதிய பிரதமரானார் Mark Carney

Lankathas Pathmanathan

கனமழை காரணமாக Trans-Canada நெடுஞ்சாலை மூடப்பட்டது!

Lankathas Pathmanathan

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

Leave a Comment