கனடாவை NDP அரசாங்கம் மீண்டும் கட்டியெழுப்பும் என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார்.
புதிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு Hamilton நகரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான சனிக்கிழமை (14) கட்சி தலைவர் Jagmeet Singh உரையாற்றினார்.
தலைமைத்துவ வாக்கெடுப்புக்கு முன்னர் மாநாட்டில் கலந்து கொள்ளும் கட்சியின் பிரதிநிதிகள் மத்தியில் Jagmeet Singh உரை ஆற்றினார்.
Liberal, Conservative அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் கனடாவுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை அவர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அவரது கருத்துக்கள் Conservative தலைவர் Pierre Poilievre முன்வைக்கும் கருத்துக்கு எதிரானதாக கருதப்படுகிறது.