தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் சென்றடைந்தார் கனடிய வெளியுறவு அமைச்சர்

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly இஸ்ரேல் பயணமானார்.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் வெளியுறவு அமைச்சர் Tel Aviv சென்றடைந்தார்.

வெள்ளிக்கிழமை (13) Melanie Joly இஸ்ரேல் சென்றடைந்தார் என அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.

“இஸ்ரேலுக்கான கனடாவின் ஆதரவையும், சர்வதேச சட்டத்தின் படி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் Melanie Joly மீண்டும் உறுதிப்படுத்துவார்” என வெளிவிவகார அமைச்சு இந்த பயணம் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில்  தெரிவித்தது.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் பயங்கரவாத தாக்குதலின் தாக்கங்கள், காஸாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்தும் அமைச்சர் தனது பயணத்தில் ஆராயவுள்ளார்.

மூன்று நாள் பயணத்தில் Melanie Joly ஜோர்டான் பயணிக்கவுள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.

Related posts

Montreal மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்த நபர் – தடுக்க முயன்ற மூவர் காயம்

Lankathas Pathmanathan

Prince Edward தீவில் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மின்சாரம் இல்லை

Lankathas Pathmanathan

இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கண்ட சிறுபான்மை அரசு

Gaya Raja

Leave a Comment