தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் இரண்டாவது கனடியர் பலி

இஸ்ரேல், காசா பகுதியில் தொடரும் மோதலில் இரண்டாவது கனடியர் பலியாகினார்.

இஸ்ரேல் இசை விழாவில் நிகழ்ந்த ஹமாஸ் தாக்குதலில் Vancouver நகரை சேர்ந்த கனடியர் கொல்லப்பட்டார்.

பலியானவர் 24 வயதான Ben Mizrachi என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

இஸ்ரேலில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இவர் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் சனிக்கிழமை (07) திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் குறைந்தது 1,600 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர்.

தவிரவும் மேலும் இரண்டு கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

Related posts

காசாவை விட்டு வெளியேற மறுக்கப்படும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment