தேசியம்
செய்திகள்

கனடா முழுவதும் பாலஸ்தீன, இஸ்ரேலிய ஆதரவு போராட்டங்கள்

கனடா முழுவதும் பாலஸ்தீன, இஸ்ரேலிய ஆதரவு போராட்டங்கள், பேரணிகள் நிகழ்கின்றன.

Toronto, Calgary, Vancouver, Winnipeg, Halifax ஆகிய நகரங்களில் திங்கட்கிழமை (09)  இந்த போராட்டங்கள், பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் சனிக்கிழமை (07) திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலில் ஒரு கனடியர் உட்பட 1,600 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணி Torontoவில் Mel Lastman சதுக்கத்தில்
திங்கள் மாலை நடைபெற்றது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்

Toronto பெரும்பாக UJA கூட்டமைப்பு இந்த பேரணியை முன்னெடுத்தது.

இந்த கொடூரமான தாக்குதலில் ஹமாஸ் போராளிகளினால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்துவதாக இந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.

இந்த பேரணிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றும் Mel Lastman சதுக்கத்தில்  முன்னெடுக்கப்பட்டது.

இந்த இரு தரப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நான்கு பேர் திங்கள் இரவு 9 மணி வரை கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

திங்கள் காலை பாலஸ்தீன இளைஞர் இயக்கத்தினால் Nathan Phillips சதுக்கத்தில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பலஸ்தீன மக்களை ஆதரிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்படுவதாக இதில் கலந்து கொண்ட பலர் கூறினர்.

ஆனாலும் ஹமாசுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டங்களை பிரதமர் Justin Trudeau கடுமையாகக் கண்டித்துள்ளார்.

Related posts

நாடளாவிய ரீதியில் சுற்றுச்சூழல் கனடாவின் குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

இராணுவத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியது

Lankathas Pathmanathan

Greenbelt திட்டம் குறித்த RCMP விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment