February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

இஸ்ரேல், காசா பகுதியில் அதிகரித்து வரும் மோதல்கள், முன்னேற்றம் காண்பதற்கு முன், நிச்சயமாக மோசமடையும் என கனடாவின் வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்கள்கிழமை தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக Melanie Joly கூறினார்.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் சனிக்கிழமை (07) திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலில் ஏற்கனவே இரு தரப்பிலும் 1,600 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பலியானவர்களில் ஒரு கனடியர் அடங்குகின்றார்.

தவிரவும் மூன்று கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

பலியானவர் Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

Tel Aviv, Ramallah ஆகிய நகரங்களில் உள்ள கனடிய தூதரகங்கள், கனேடியர்களுக்கு உதவும் வகையில்  திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Melanie Joly உறுதிப்படுத்தினார்.

தூதரக உதவிக்கான அதிகரித்த தேவையை நிவர்த்தி செய்வதற்காக, எகிப்து, Lebanon, Jordan ஆகிய நாடுகளிலும் அதிக ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

June மாத இறுதிக்குள் 10 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும்

Lankathas Pathmanathan

Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

மத்திய வரவு செலவுத் திட்டம் NDP-Liberal ஒப்பந்தத்தின் நிலையை தீர்மானிக்கும்: NDP

Lankathas Pathmanathan

Leave a Comment