தேசியம்
செய்திகள்

ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயங்கரவாத குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் கனடிய பெண்

ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பயங்கரவாத குற்றச்சாட்டை கனடாவில் உள்ள பெண் எதிர்கொண்டுள்ளார்.

29 வயதான Ammara Amjad, ISIS நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பயங்கரவாதம் தொடர்பான குற்றத்தை எதிர்கொள்கிறார் என RCMP கூறுகிறது.

கடந்த April 4ஆம் திகதி  சிரியாவில் இருந்து கனடா திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவர் நிபந்தனைகளில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த வியாழக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்ட அவர் ISIS இன் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இரண்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட அவர், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அவர் மீண்டும்  November 17ஆம் திகதி நீதிமன்றத்தில்  விசாரணைகளை எதிர் கொள்ளவுள்ளார்.

Related posts

April மாதம் 19ஆம் திகதி மத்திய Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம்!

Gaya Raja

Paris Paralympics: முதலாவது நாள் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Newfoundland மாகாணத்தில் அவசரகால நிலை நீக்கப்பட்டது

Lankathas Pathmanathan

Leave a Comment