February 22, 2025
தேசியம்
செய்திகள்

பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழர்

Torontoவில் தமிழர் மீது மனித கடத்தல் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இவர் Montreal விடுதியில் 3 மாதங்கள் பெண் ஒருவரை தடுத்து  வைத்திருந்ததாக கூறப்படுகிறது

Toronto காவல்துறையினரின் மனித கடத்தல் விசாரணையை தொடர்ந்து Markham நகரைச் சேர்ந்த 32 வயதான ராஜ் கிருபானந்தன் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.

இவர் January 2020 முதல் July 2023 வரை ஒரு பெண்ணை கடத்தி , மூன்று மாதங்களுக்கு Montreal விடுதி அறையில் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவர் அந்த பெண்ணை மூன்று வருடங்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்தித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கடந்த மாதம் ஆரம்பித்த விசாரணையை தொடர்ந்து ராஜ் கிருபானந்தன் மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

இவரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் அச்சம் தெரிவித்தனர்.

இவர் தன் மீதான குற்றச்சாட்டை எதிர்வரும் 20ஆம் திகதி எதிர் கொள்ளவுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

முன்னாள் இராணுவ அதிகாரி அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு

Lankathas Pathmanathan

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

Lankathas Pathmanathan

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Leave a Comment