December 12, 2024
தேசியம்
செய்திகள்

வட அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் சந்திப்பு

கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் British Colombiaவில் சந்தித்தனர்.

சனிக்கிழமை (30) Surrey நகரில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கடந்த June மாதம் British Colombiaவில் கொல்லப்பட்டார்.

இந்திய அரசின் முகவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதாக நம்பகமான ஆதாரங்கள் உள்ளதாக கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த பின்னணியில் கனடா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளை சேர்ந்த சீக்கிய தலைவர்கள் British Colombiaவில் சந்தித்தனர்.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும், Hardeep Singh Nijjar கொல்லப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் அவர்கள் இந்த சந்திப்பை முன்னெடுத்தனர்.

இந்த விடயத்தில் கனடிய மத்திய அரசுக்கு அனுப்ப நான்கு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை சமூகத் தலைவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தங்களை உடனடியாக முடக்குவது அல்லது நீக்குவது என்பது இந்த கோரிக்கைகளில் பிரதானமானதாகும்.

Related posts

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

Lankathas Pathmanathan

தணிக்கையை இரத்து செய்ய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

Lankathas Pathmanathan

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan

Leave a Comment