December 12, 2024
தேசியம்
செய்திகள்

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் மன்னிப்பு

Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார்.

இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட ஒருவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்காக புதன்கிழமை (27) பிரதமர் மன்னிப்பு கோரினார்.

இது கனடாவை பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய தவறு என Justin Trudeau ஒப்புக் கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து கனேடிய அரசாங்கம் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyyயை தொடர்பு கொண்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

உக்ரைன் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை (22) கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

இந்த உரையின் போது  Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்தை அனைத்து தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

இதன் பின்னணியில் நாடாளுமன்ற சபாநாயகர் Anthony Rota செவ்வாய்க்கிழமை (26) பதவி விலகினார்.

Related posts

துருக்கியில் நிலநடுக்க இடிபாடுகளில் இருந்து கனடிய பெண்ணின் உடல் கண்டெடுப்பு

Lankathas Pathmanathan

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Lankathas Pathmanathan

உலக Junior Championship தொடரில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment