Torontoவில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு முன்பாக முற்றுகை போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
புதன்கிழமை (20) மதியம் 12 மணி முதல் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
Eglinton வீதியில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு முன்பாக இந்த முற்றுகை போராட்டம் கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையின் திருகோணமலை திலீபனின் நினைவூர்தியை தாக்கியதுடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் உட்பட பலர் தாக்கி காயப்படுத்தப்பட்டனர்.
இதனை கண்டிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இலங்கை தூதரங்களுக்கு முன்பாக முற்றுகை போராட்டங்கள் புதன்கிழமை ஏற்பாடாகியுள்ளது.