நான்கு மாகாணங்கள், பிரதேசங்களில் உள்ள அரசாங்க இணையதளங்கள் வியாழக்கிழமை (14) செயலிழந்தன.
Yukon, Manitoba, Prince Edward Island, Nunavut ஆகிய மாகாணங்கள், பிரதேசங்களின் இணையதளங்கள் வியாழக்கிழமை செயலிழந்தன.
Yukon பிரதேசம், Prince Edward Island மாகாணம் ஆகிய அரசாங்கங்களின் இணையதளங்கள் செயல் இழந்ததற்கு சைபர் தாக்குதல்கள் காரணம் என கூறப்படுகிறது.
வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை Yukon அரசாங்க இணையதளங்கள் செயல் இழந்திருந்தன.
ஏனைய மூன்று அரசாங்கங்களின் இணையதளங்கள் வியாழக்கிழமை மாலை வரை தொடர்ந்து செயலிழந்தன.