தேசியம்
செய்திகள்

சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லை நீட்டிப்பு

COVID தொற்று காலத்தில் வழங்கப்பட்ட சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை அரசாங்கம் நீட்டிக்கிறது

சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை கனடாவில் உள்ள சிறு வணிகங்களுக்கு கனடிய அரசாங்கம் அதிகரிக்கிறது

பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை London Ontarioவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வியாழக்கிழமை (14) வெளியிட்டார்.

COVID தொற்று காலத்தில் வழங்கப்பட்ட கனடா அவசர வணிகக் கணக்கு (Canada Emergency Business Account – CEBA) கடனைத் திருப்பிச் செலுத்த இன்னும் ஒரு வருட அவகாசம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறு வணிக அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லை “இறுதியானது, மாற்ற முடியாது” என அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.

ஆனாலும் நூறாயிரக்கணக்கான சிறு வணிகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடா முழுவதிலும் உள்ள குழுக்கள், இந்த அவசரக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் கால எல்லையை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

898,271 வணிகங்களுக்கு கனடா அவசர வணிகக் கணக்கு (Canada Emergency Business Account – CEBA) கடன்கள் அங்கீகரிக்கப்பட்டன.

இதன் மூலம் மொத்தம் $49.2 பில்லியன் டொலர்கள் கடன் வழங்கப்பட்டது.

May 31 வரை, CEBA கடனைப் பெற்ற சுமார் 21 சதவீத வணிகங்கள் அவற்றை முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளன.

Related posts

குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்திய தூதர்கள் “கடுமையான தடைகளுக்கு” உட்படுத்தப்பட வேண்டும்: Jagmeet Singh

Lankathas Pathmanathan

42 வயதான OPP அதிகாரி சூட்டுக் கொலை

Lankathas Pathmanathan

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment