தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தம்

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட (Housing Accelerator Fund – HAF) நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தத்தை பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (13) அறிவித்துள்ளார்.

London Ontarioவில் இந்த அறிவித்தலை பிரதமர் வெளியிட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் முதல் நிதியுதவியை பிரதமர் புதனன்று வெளியிட்டார்.

“வீட்டுத் திட்டம் என்பது தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சனை’ என இந்த அறிவித்தலின் போது Justin Trudeau கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வீட்டு வசதித்துறை அமைச்சர் Sean Fraser பிரதமருடன் உடனிருந்தார்.

London நகராட்சி உடனான $74 மில்லியன் ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள்  உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது அடுத்த ஆண்டுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் உருவாக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

கனடிய அரசின் இந்த $4 பில்லியன் திட்டத்தின் மூலம், Liberal அரசாங்கம் நாடளாவிய ரீதியில் 100,000 புதிய வீடுகள் உருவாக்க இலக்கு வைத்துள்ளனர்.

Related posts

Toronto நகர முதல்வருக்கு எதிராக பார்த்தி கந்தவேல் புகார்

Lankathas Pathmanathan

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Lankathas Pathmanathan

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment