இலங்கையில் மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட கனடியத் தமிழர் நிதி சேர் நடை ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
கனடியத் தமிழர் பேரவை தனது 15 வது நிதி சேர் நடையை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தது.
இந்த ஆண்டு நிதி சேர் நடையில் திரட்டப்படும் நிதி, இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என கனடியத் தமிழர் பேரவை அறிவித்திருந்தது.
இந்த நிதி, இலங்கையின் தெஹியோவிட்ட தமிழ் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்தை நிர்மாணிப்பதற்கும் அதனை இயங்க வைப்பதற்கும் முழுமையாக செலவு செய்யப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிதிசேர் நடையை Toronto நகர முதல்வர் Olivia Chow ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிதிசேர் நடையில் இதுவரை 55 ஆயிரம் டொலர்கள் சேகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிதிசேர் நடையின் மூலம் 100 ஆயிரம் டொலர் நிதி சேகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.