December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகல்

Greenbelt அறிக்கைக்கு மத்தியில் Ontario வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் பதவி விலகினார்.

வீட்டுத் திட்ட அமைச்சரின் தலைமைப் பணியாளர் Ryan Amato தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வர் அலுவலகக்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பதவி விலகலை முதல்வர் அலுவலகம் செவ்வாய்கிழமை (22) வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்துள்ளது.

அவரது பதவி விலகல் கடிதத்தை “உடனடியாக அமுலுக்கு” வரும் வகையில் ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் கூறியது.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டங்கள் சார்புடையவை என தனது புதிய அறிக்கையில் அண்மையில் கணக்காய்வாளர் நாயகம் Bonnie Lysyk பரிந்துரைத்திருந்தார்.

Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்டம் குறித்த முடிவு சில கட்டுமான நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது என இந்த மாத ஆரம்பத்தில் வெளியான அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஆனாலும கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த குற்றச்சாட்டை Ontario முதல்வர் Doug Ford மறுத்திருந்தார்.

Related posts

Hydro வெடிப்பின் காரணமாக இரண்டு தொழிலாளர்கள் காயம்

Lankathas Pathmanathan

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment